🎵 Lyrics
என்றும் வாழுவேன் இயேசுவுக்காக
இன்றும் வாழ்கிறேன் இயேசுவுக்காக
வாழ்கிறேன் வாழுவேன் இயேசுவுக்காக – 2
1. கானல்நீராய் கடந்துபோன என் வாழ்க்கையில்
நம்பிக்கை ஊற்றாய் சோலைவனமாய் இயேசு வந்தார்
ஜீவத்தண்ணீர் பருகினேன் – நித்ய
ஜீவனும் அடைந்திட்டேன்
என் ஜீவன் இயேசுவுக்கே
2. சூரைச்செடி கீழ் சோர்ந்து எலியா அயர்கையில்
தூதன் தந்த அப்பமும் நீரும் தேற்றினதே
எலியா போல நான் எழும்பிடுவேன்
ஜீவ நாள் வரை உழைத்திடுவேன்
என் பெலனெல்லாம் இயேசுவுக்கே
3. கடுங்காற்று வீசி கார்மேகம் கலைத்து சென்றதே
வறுமை வறட்சி வாழ்வில் வந்தென்னை வதைத்ததே
வான் மழையாய் இயேசு வந்தார்
வாழ்வில் செழிப்பும் வந்ததே
என் எல்லாம் இயேசுவுக்கே