🎵 Lyrics
எழும்பு எழும்பு சீயோனே – உன்
வல்லமையை இன்று தரித்துக் கொள்
1. அழுக்கான வஸ்திரம் அகற்றிடு
ஆவியின் வல்லமை அணிந்திடு
யுத்தம் செய்ய புறப்படு
போரில் ஜெயத்தை பெற்றிடு
2. தூசியைத் தட்டி எழுந்திரு
தூங்கும் மனிதரை எழுப்பிடு
வாயில் எக்காளம் வைத்திடு
ஊதி ஜெயத்தை முழங்கிடு
3. சுவிசேஷம் என்றும் அறிவித்திடு
சமாதானம் கூறி தெரிவித்திடு
உன் தேவன் உன்னை நடத்திடுவார்
என்று சீயோனுக்கு நீ சொல்லிடு