🎵 Lyrics
இக்கட்டில் எனக்கு உதவிடும்
உம் இரக்கங்கள் மகா பெரிது
பாவமோ, சாபமோ
மந்திரமோ, தேவகோபமோ
(உமது) உம் கைகளில் விழுகின்றேன் நான்.
1. கர்த்தாவே எனக்கு நீர் இரங்கும்
ஆத்துமாவை குணமாக்கும்
மிகுந்த உம் இரக்கங்களால்
மீறுதல் நீக்கிவிடும்.
2. ஆயிரம் தலைமுறைக்கும் நீரே
இரக்கம் செய்பவரே
உம் இரக்கங்கள் எப்போதுமே
முடிவதே இல்லையே.
3. கர்த்தாவே உம்மை நோக்கி எந்தன்
கண்களை ஏறெடுக்கிறேன்
இரக்கம் செய்யும் வரைக்கும்
உம்மையே நோக்கிடுவேன்.