🎵 Lyrics
இன்ப இயேசு ராஜா
என் அழகு சாரோனின் ரோஜா
உம்மை ஆசையாய் கொஞ்சி மகிழ்வேன்
உம் பாதம் அமர்ந்து இருப்பேன்
உம்மை பார்த்து, பார்த்து ரசிப்பேன்
1. அன்புக்காய் ஏங்கி நின்றேன்
என் இயேசு ராஜனைக் கண்டேன்
அன்பின் கரத்தால் அணைத்தீர்
ஆசையாய் முத்தங்கள் கொடுத்தீர் – 2
2. நேசரின் சத்தம் கேட்குதே
என் கண்கள் ஆசையாய் தேடுதே
வெண்மையும் சிவப்புமானவர்
முற்றிலும் அழகானவரே – அவர்
என் ஆசை நாயகர் அவரே
3. ஆவியின் அச்சாரம் கொடுத்தீர்
முத்திரை மோதிரம் தந்தீர்
உம் வார்த்தையின் பட்டயம் ஏந்தி
நான் சாத்தானின் கோட்டையை தகர்ப்பேன்- 2