🎵 Lyrics
இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு
என்னைக் காக்கும் இயேசு இரட்சகர் உண்டு
யேசபேலே, பிலேயாமே, ஆமானே, கோலியாத்தே
நீ அழியும் நாள் (2) (இன்றைக்கே) வந்தது
1. பாகாலின் வல்லமைகள் கொக்கரித்தாலும்
எலியாவின் தேவன் என்றும் என்னோடுண்டு
கேட்டருளும், கேட்டருளும் என்பேன்
அக்கினியால் உத்தரவு அவர் தருவார் – என்னை
2. மறைவான சாபங்கள் நெருங்கி வந்தாலும்
இஸ்ரவேலைக் காக்கும் தேவன் என்னோடுண்டு
மந்திரவாதம், பில்லிசூனியம் செல்லாது
ராஜாவின் ஜெயகெம்பீரம் அதற்கு உண்டு
3. தூக்குமரம் துஷ்ட ஆமான் செய்து வைத்தாலும்
தீச்சூளை ஏழு மடங்கு அதிகரித்தாலும்
ஜெபிப்பேன், துதிப்பேன், ஆராதிப்பேன்
என் தேவன் தப்புவிக்க எழுந்தருள்வார்