🎵 Lyrics
காலையில் எழுந்ததும் நான்
கர்த்தரை நோக்கிடுவேன்
கண்களை ஏறெடுப்பேன்
கைகளை உயர்த்திடுவேன்
1. எனக்கு உதவி செய்யும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கின்றீரே
எதிரி என்ன செய்வான்
எப்படி மேற்கொள்வான்
2. எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
என் பக்கம் இருக்கின்றீரே
ஏன் நான் கலங்கிடணும்
ஏன் நான் பயப்படணும்
3. தேவ சமூகத்தில் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யெகோவாயீரே நீரே
எதையுமே இழப்பதில்லை
ஒன்றுமே குறைவதில்லை