Kaetpathellam Thanthiduvar

Vazhvin Geethangal #24

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

கேட்பதெல்லாம் தந்திடுவார்
எதை கேட்டாலும் தந்திடுவார்
இயேசு நாமத்திலே விசுவாசத்திலே
இன்று தந்திடுவார் இப்போ தந்திடுவார்
வந்திடுவார் எல்லாம் தந்திடுவார்
இல்லை என்று சொல்லமாட்டார் – எதையும்

1. அப்பம் கேட்டால் கல்லை கொடுப்பாரோ
மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரோ
மிகவும் அதிக நன்மை செய்திடுவார்
நம் பரம தகப்பன் செய்வார் – வந்திடுவார்

2. குருடன் பார்வை கேட்டான் கொடுத்தாரே
முடவன் நடக்கவும் செய்தாரே
ஊமையனை பேசவும் வைத்தாரே
வியாதிகளை நீக்கி சுகம் தந்தாரே – வந்திடுவார்

3. கேட்கிற எல்லாரும் பெற்றுக்கொள்வாரே
தேடுகிற அனைவரும் கண்டிடுவாரே
தட்டும் அனைவருக்கும் திறந்திடுவார்
தடையின்றி வழிகள் திறந்திடுவார் – வந்திடுவார்