🎵 Lyrics
கற்கள் கூப்பிடுதே காட்டுப் புறா சத்தமிடுதே
நீயும் நானும் இயேசுவுக்காக
என்ன செய்து விட்டோம் -2.
எழும்பி வா! வாலிபனே!
எழும்பி வா! கன்னிகையே!
1. அழிந்திடும் வாலிபரின் அலறல் சத்தங்கள்
உந்தன் செவிகளில் கேட்கலையோ
ஆத்தும பாரம் கொண்டு அருகினில் நீ சென்று
அன்பாய் இயேசுவை சொல்லிடு (எழும்பி)
2. அன்புக்காய் ஏங்கி அலைந்து திரிந்திடும்
கோடிக்கணக்கான உள்ளங்களை
ஆற்றி தேற்றிட நான் உண்டென்று சொல்லிட
யாரை இன்று நான் அனுப்புவேன் (எழும்பி)
3. விடை தெரியா குழப்பம், வழிதெரியா கலக்கம்
கண்ணீரின் பாதையில் போகின்றாரே
நானே வழி என்று விடையை காட்டிட
உனக்கிருக்கும் பெலத்தோடு புறப்படு (எழும்பி)