Karthar Ennai

Vazhvin Geethangal #10

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

கர்த்தர் என்னை விசாரிப்பவர்
என் கவலைகளை அவரிடம் சொல்வேன்
கர்த்தர் என்னை தேற்றுபவர்
என் பாரங்களை அவரிடம் தருவேன்

1. தாங்கி தாங்கி இளைத்துப் போனேன்
தாங்கும் உம்மை மறந்து போனேன்
தாங்கியே நடத்தும் உந்தன்
கரம்தனை பற்றிக் கொண்டேன்

2. எதையும் செய்ய இயலாத
ஏழை நீசன் நானே ஐயா
எல்லாமே செய்ய வைத்திடும்
உம் பாதத்திலே விழுந்து விட்டேன்

3. ஜெபித்தாலும் சோர்ந்து போகிறேன்
ஜெப வாழ்வில் தளர்ந்து போகிறேன்
ஜெபத்தை கேட்டிடும் உந்தன்
கிருபைகளை நம்பி வந்தேன்