🎵 Lyrics
கர்த்தர் உந்தன் நம்பிக்கையாயிருந்து
உன் கால் சிக்கிக் கொள்ளாமல் காப்பார்
அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்
1. உன் கால் இடறி விழ விடமாட்டார்
உன்னைக் காக்கும் தேவன் அவர் உறங்கமாட்டார்
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லை
அவர் தூங்குவதும் இல்லை
உனது பக்கம் நிழலாக இருக்கின்றார்- 2
2. கர்த்தர் உன்னை எப்பொழுதும் காக்கிறவர்
வெயிலும், நிலவும் உன்னை சேதப்படுத்துவதில்லை
எல்லாத் தீங்குக்கும் விலக்கி உன்னை
காத்திடுவார் உன் ஆத்துமாவை காப்பார்
போக்குவரவை இது முதற்கொண்டு காத்திடுவார்
3. அவர் தமது சிறகுகளால் உன்னை மூடுவார்
செட்டையின் கீழே அடைக்கலம் நீ புகுந்திடுவாய்
இரவின் பயம் பகலின் அம்பு எதற்கும்
பயமில்லை அவை அணுகுவதும் இல்லை
உன்னதமான கர்த்தரை உனக்கு தாபரமாய் கொண்டாய்