🎵 Lyrics
நான் சர்வ வல்ல தேவன்
நீ எனக்கு முன்பு நடந்து
என்றும் உத்தமனாயிரு – நீ
உத்தமியாயிரு
1. போகும் வழியைக் காட்டிடுவேன்
நடக்கும் வழியைச் சொல்லிடுவேன்
உன்னோடு எப்போதும் இருந்திடுவேன்
உனக்காய் யாவையும் செய்திடுவேன்
2. காலையில் என் முகம் தேடிடு
கலக்கம் எல்லாம் நீக்கிடு
கலங்கிப் போன உள்ளங்களை
என்னிடம் கொண்டு சேர்த்திடு
3. வானத்தை அண்ணாந்து பார்த்திடு
நட்சத்திரங்கள் எண்ணிடு – நீ
எண்ணி முடியாத நன்மைகளை
என்றும் உனக்குத் தந்திடுவேன்