🎵 Lyrics
நீங்கதான் எனக்கு வேண்டுமே
இயேசுவே உம் சமூகமே
நீர் இல்லாமல் வாழ்வில்லை
நீர் இல்லாமல் வழி(யே)யில்லை
1. நீர் எனக்கு தந்த அனைத்தும் அனுபவித்து பார்த்துவிட்டேன்
எதிலும் மனம் நிறையவில்லை
நீர் மட்டும் போதும் என்று
உம்மிடமே வந்துவிட்டேன்
எந்தன் நேசரே! அருமை நேசரே
2. மனிதன் உலகனைத்தும் ஆதாயமே ஆக்கினாலும் ஆத்துமாவை
(இழந்தால்) கெடுத்துக் கொண்டால் என்ன லாபமே
கிறிஸ்துவே என் ஜீவன்
சாவது ஆதாயமே
நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறீர்
(வாழணும்)
3. நீர் விரும்பும் காரியங்கள் ஒவ்வொன்றையும் கவனிப்பேன்
நீர் வெறுக்கும் காரியங்கள் செய்யவேமாட்டேன்
நன்மை செய்திடவே திரும்பவும் நினைக்கிறீர்
என்னிடத்தில் திரும்பியே ஆசீர்வதிக்கிறீர்