🎵 Lyrics
நீரே என் சிறுமையில் என் ஆறுதல்
நெருக்கப்படும் காலங்களில் என் தஞ்சமே
1. சிறுமைப்பட்ட தேசத்தில் நான் பலுகிடுவேன்
பஞ்சங்கள் ஒரு போதும் என்னை அணுகுவதில்லை
சஞ்சலம்,வருத்தம் யாவையும்
தேவன் மறக்கப் பண்ணினீர்
2. எளியவன் என்றென்றைக்கும் மறக்கப்படுவதில்லை
சிறுமைப்பட்டவரின் நம்பிக்கை கெட்டுப்போவதில்லை
கூப்பிடும் எளிய உதவியற்றவனை விடுவிக்கின்றீர்
3. சிறுமையும் எளிமையுமான என்மேல் நினைவாயிருக்கிறீர்
தேவரீர் என் துணையாய் இருந்து ஆறுதல் செய்கிறீர்
பலவானின் கைக்கு விலக்கி காப்பாற்றுகிறீர்