🎵 Lyrics
நீர் தான் மாற்றக்கூடியவர் என் இயேசுவே
நான் தான் மாற வேண்டியவள்
1. விரும்புகிற நன்மை செய்யாமல் நான்
விரும்பாத தீமை செய்கின்றேன்
விரும்புகிற என்னால் எதுவுமே ஆகாது
இரங்குகிற உம்மால் எல்லாமே ஆகிடும்
2. உடலும், உள்ளமும் விரும்புவதெல்லாம்
இன்றைக்கு சிலுவையில் நான் அறைகின்றேன்
எந்தன் சித்தம் ஒன்றுமே வேண்டாம்
உந்தன் சித்தம் எல்லாமே ஆகட்டும்
3. உலகப் பெருமை செல்வங்கள் எல்லாம்
இன்றைக்கு இருந்து நாளைக்கு மறையும்
அழிந்திடும் ஒன்றையும் நான் தேடமாட்டேன்
அழியாத உம்மை நான் தேடி மகிழுவேன்