🎵 Lyrics
நீயும் அமர்ந்திருந்து நானே தேவனென்று
அறிந்து உணர்ந்திடு என்னிடம் திரும்பிடு
1. இங்கும் அங்கும் ஓடும் போது
கவனம் என சொல்லவில்லையா
என்னை விட்டு போவதே
துன்பம் என சொல்லவில்லையா
இன்றே வந்திடு என்னை நம்பிடு
உன்னை தாழ்த்திடு உயர்வைப் பெற்றிடு
2. உடைந்த பாத்திரம் நீ
உதறி நான் தள்ளவில்லை
உபயோகமற்றதென்று
உன்னை நான் சொல்லவில்லை
ஆத்துமாவை அடக்கியே அமர்ந்து ஆராய்ந்திடு
உன் நிலை உணர்ந்திடு மேன்மை அடைந்திடு
3. இளவயதின் பக்தியையும்
நேசத்தையும் நினைத்திடுவேன்
என் வார்த்தை தீவிரமாய்
உன்னிலே நிறைவேற்றுவேன்
சின்னப் பிள்ளை என்று சொல்லாதே
உன்னோடு இருக்கிறேன்
கட்டவும் நாட்டவும் உன்னை
நான் தெரிந்து கொண்டேன்