🎵 Lyrics
நெரிந்த நாணலை தேவன்
என்றும் முறித்துப் போடுவதில்லை
மங்கி எரிகின்ற திரியை
அவர் அணைத்துப் போடுவதில்லை.
உடைந்து போன உன் மனதை
தேவன் இடித்துப் போடுவதில்லை.
மனம் சலித்துப் போன உன் வாழ்வை
அவர் அழித்துப் போடுவதில்லை
(உன்னை) நிமிர்ந்து நிற்கச் செய்வார்
(உன்) விளக்கு எரியச் செய்வார்
(புது) எண்ணெய் அபிஷேகத்தால்
உன் பாத்திரம் நிரம்பச் செய்வார்.
நிரம்பி வழியச் செய்வார்.
1 . உன் கட்டுகளை அவிழ்த்திடுவார்,உனக்கு இரங்கிடுவார்
உன் சிறையிருப்பை மாற்றி திரும்ப சேர்த்துக் கொள்வார்.
2. நன்மையால் உன் வாயை திருப்தியாக்குகிறார்
கழுகின் இளமையைப் போல் திரும்ப இளவயதைத் தருவார்.
3. தகப்பன் பிள்ளைகளுக்கு இரக்கம் செய்வது போல்
தமக்கு அஞ்சுவோர்க்கு தேவன் இரக்கம் செய்திடுவார்.
4. நம் பாவத்திற்கு ஏற்றபடி நம்மை நடத்துவதேயில்லை
நம் குற்றத்திற்கு ஏற்றபடி நம்மை தண்டிப்பதே இல்லை.