
🎵 Lyrics
ஒரு விசையாய் மனமிரங்குங்க
புது பெலன் எனக்குத் தாருங்க
இழந்ததை மீண்டும் தந்திடுங்க
இயேசுவே மனம் இரங்குங்க
1. நீர் என்னை நடத்திக் கொண்டு
போகும் காலத்தில்
உம்மை நான் விட்டு விட்டேனே
தண்ணீர் நிற்கா வெடிப்புள்ள
தொட்டிகளை நான்
எனக்காக வெட்டிக் கொண்டேனே
ஜீவத் தண்ணீரே…. எனது ஊற்றே…
மன்னியுமையா… மனம் இரங்குமையா
2. நற்கனி தரும் உயர்குல திராட்சை செடியாய்
என்னை நீர் நட்டு வைத்தீரே
கனி இல்லா ஆகாத காட்டுச் செடியாய்
நான் இன்று மாறிப்போனேனே
சேனைகளின் தேவனே… திரும்பி வாருமே…
உம் திராட்சை செடியை கண்ணோக்குமையா
3. அக்கிரமம் பொறுத்து மீறுதலை மன்னிக்கும்
உமக்கு ஒப்பான தெய்வம் யார் உண்டு
பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில்
போட்டு விடும் தேவன் நீர் உண்டு
என்றென்றைக்குமே….. கோபம் வையீரே
திரும்ப என் மேல் மனம் இரங்குவீரே