🎵 Lyrics
சேனைகளின் கர்த்தர் என்றும்
பரிசுத்தர், பரிசுத்தர்
சேனைகளின் அதிபதியே பரிசுத்தர்
1. பூமி நிலைமாறினாலும், மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் – இருக்கிறீர்
சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர்
2. இரவின் பயத்துக்கும், பகலின் அம்புக்கும்
கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் – இருக்கிறீர்
உமது சிறகால் என்னை மூடுவீர்
3. உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் – இருக்கிறீர்
தீமைகள் அணுகாமல் காத்திடுவீர்