🎵 Lyrics
சிலுவையினடியில் காத்திருக்கின்றேன்
இரக்கம் செய்யுமையா-எனக்கு
இரக்கம் செய்யுமையா
1. வேதனையால் உள்ளம் தவிக்கிறதே
வலியினால் உடலும் துடிக்கிறதே
நோயினால் சிறைப்பட்டேன் சிறுமைப்பட்டேன்
சிறைக்கதவை திறந்தருளும்-தேவா
விடுதலை தந்தருளும்
2. எனக்காக முள்முடி தாங்கினீரே
எனக்காக ஆணிகள் ஏற்றீரே
என்னால் உம் இதயம் நொறுங்கினதே
இயேசுவே இரங்கிடுமே-என்னை
கிருபையாய் மன்னித்திடுமே
3. நாவினால் பாவம் செய்யாமலே
உதடுகளின் வாசலை காத்தருளும்
சோதனை என்னை சூழும்போது
ஜெயித்திட கிருபை தாரும்-தேவா