🎵 Lyrics
தாகம் தீர்க்கும் ஜீவ நதியே
தாங்கும் நல்ல எங்கள் இயேசுவே
தாலாட்டுவீர் சீராட்டுவீர்
தாங்கி என்னை சுமந்துசெல்வீர்
1. காலை தோறும் என்னை நீர் எழுப்புகிறீர்
கற்றுக் கொள்ள எனக்கு சொல்லி தருகிறீர்
கர்த்தாவே நீர் எந்தன் துணையானீர்
ஒரு போதும் வெட்கப்பட்டு போவதேயில்லை
2. வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
உம் பாதைகள் நெய்யாகப் பொழியச் செய்தீர்
செழிப்பான வாழ்வை தந்தீரய்யா
காலமெல்லாம் நன்றி சொல்லி துதிப்பேனய்யா
3. எழுப்புதல் காற்று இங்கே வீசச் செய்யுமே
வெறுமையான இடமெல்லாம் நிரம்பச் செய்யுமே
ஆவியின் மழை இங்கே ஊற்றிவிடுமே
ஆனந்தமாய் பாடி மகிழச் செய்யுமே