🎵 Lyrics
உடன்படிக்கையின் தேவன்
உன்னை மறக்கவே மாட்டார்
இரக்கங்களின் தேவன்
உன்னை கைவிடவேமாட்டார்
1. சீயோனே கலங்காதே
உனக்கவர் இரங்குவார்
குறித்த காலமும்
தயைசெய்யும் நேரமும்
உனக்கின்றே வந்துவிட்டது
2. இரக்கங்களும் மன்னிப்பும்
ஆண்டவரிடம் உண்டு
உண்மையாய் அவரிடம்
திரும்பும் யாவரையும்
மன்னித்து ஏற்றுக்கொள்வார்
3. வியாதிகளும் வேதனையும்
உன்னையும் வாட்டுதோ
அப்பத்தையும் தண்ணீரையும்
ஆசீர்வதிப்பவர் – வியாதியை
உன்னைவிட்டே விலக்குவார்