
🎵 Lyrics
உம் பாதப்படியில் என்னை நான் தாழ்த்துகிறேனே
உம் பாதம் பணிந்து உம்மையே உயர்த்திடுவேனே
1. இயேசுவே நீரே என் இரட்சகர்
நீர் இல்லாமல் என் வாழ்வு மலருமோ
நீர் இல்லாமல் என் வாழ்வு உயருமோ – உம்பாத
2. இயேசுவே நீரே என் கன்மலை
உமது நிழலிலே மறைந்து கொள்ளுவேன்
உமது சிறகிலே ஒளிந்து கொள்ளுவேன் – உம்பாத
3. இயேசுவே நீரே என் குயவனே
எனது வாழ்வு உமது கையில் வனையுமே
உம்மை போல் என்னை இன்று மாற்றுமே – உம்பாத
4. இயேசுவே நீரே என் வைத்தியரே
உமது சுகம் என்னில் இன்று தாருமே
உமது கரம் என்னில் இன்று வையுமே – உம்பாத