🎵 Lyrics
உன்னதமானவரே உம் மறைவிலிருக்கிறேன்
சர்வ வல்லவரே உம் நிழலில் தங்கிடுவேன்
1. கொடூரமான சீறல் மதிலை மோதி அடிக்கும்போது
ஏழை எனக்கு பெலனாக இருந்தவரே
பெருவெள்ளம் தலைக்கு மேலே புரண்டு போகும் போது
தப்புவிக்கும் அடைக்கலமாய் இருந்தவரே
2. தீங்கு வரும் நாளில் என்னை கூடார மறைவில்
ஒளித்து வைத்து பாதுகாக்கும் கன்மலையே
சத்துருக்கு மேலாக என் தலையை உயர்த்தி
ஆனந்தமாய் பாடல்களைப் பாட வைத்தீரே
3. சிறுமைப்பட்ட எனக்கு கர்த்தர் அடைக்கலமானீர்
நெருக்கப்பட்ட காலங்களில் தஞ்சமானீரே
ஒடுக்கப்படும் நேரங்களில் புகலிடம் தந்து
எளிய என்னை மறவாமல் தூக்கி எடுத்தீரே