🎵 Lyrics
உன்னைக் காக்கும் தெய்வமோ
உறங்குவதில்லையே
உனக்கு ஏனோ கலக்கமோ
உள்ளமே கலங்காதே
1. பகலிலே வெயிலுமே
இரவிலே நிலவுமே
தீமை செய்திடாமல்
தினமும் காப்பாரே
2. போக்கிலும் வரத்திலும்
இது முதல் என்றுமே
கால்கள் இடறாமல்
உன்னை காப்பாரே
3. ஆவி ஆத்மா சரீரத்தை
ஆயன் இயேசு காப்பாரே
அவரின் வருகை வரையில்
தூய்மையாய் காப்பாரே