🎵 Lyrics
வருவேன் என்று சொன்னவர்
வரப் போகிறீர் – நானும்
இன்னும் ஆயத்தம் ஆகவில்லையே
1. இருள் சூழும் காலம் வரும்
என்ற நாட்கள் இதுதானோ!
கொடிய காலம் வரும் என்று
சொன்ன நாட்கள் இதுதானோ!
விளக்கோடு எண்ணெய் ஏந்தி
விழிப்பாய் நான் எதிர்கொள்ள
உமதாவி ஊற்றிடும் என் இயேசுவே
2. கண்களுக்கு கலிக்கம் போட்டு
வஸ்திரமும் தாருமே
பொன்னான வசனமும் விசுவாசம் தந்திடுமே
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்பவும் தந்து
ஆவியில் அனலாக எனை மாற்றுமே
3. அவனவன் ஆத்துமாவை அவனவன் காக்கட்டும்
இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன் என்றவரே
அநியாயம் செய்யாமல் அக்கிரமம் வெறுத்திடுவேன்
பரிசுத்தம் ஆகிடுவேன் இன்னும் நீதி செய்திடுவேன்
வருவேன் என்று சொன்னவர் வரப்போகிறீர்
நானும் இன்று ஆயத்தம் ஆகிடுவேன்ர்