🎵 Lyrics
விளக்கைகொளுத்தி வீட்டை பெருக்கி தேடிடுவேன்
காணாமல் போன வெள்ளிக்காசை தேடிடுவேன்
விடிவெள்ளியே! நட்சத்திரமே!
என் அருமை இயேசுவே
நீரே எந்தன் தேவை என்று தேடிடுவேன்
கண்டுபிடிக்கும் வரை ஜாக்கிரதையாய் நான் தேடிடுவேன்
1. அன்பே எந்தன் வாழ்விலில்லை
அது இல்லையென்றால் பரலோகமில்லை
அன்பே எந்தன் இயேசுவே
பரிசுத்த ஆவியானவரே
நீரே என்னை நிரப்பிடவேண்டும் கெஞ்சுகிறேன்
2. விசுவாசிக்க பெலனில்லை
அதைவிட்டால் வேறுவழியில்லை
விசுவாசத்தை துவக்கினவர்
விசுவாசத்தை முடிக்கிறவர்
விசுவாசத்தை வர்த்திக்கவேண்டும் கெஞ்சுகிறேன்
3. உண்மையை எங்கோ நான் தொலைத்தேனையா
ஞானமும் நீதியும் இல்லையையா
உண்மையும் நீதியும் உள்ளவரே
ஞானமும் மீட்புமானவரே
பிழைகளை எல்லாம் மன்னித்தருள கெஞ்சுகிறேன்