🎵 Lyrics
ஏமா…ற்றங்களா,தடுமா…ற்றங்களா
இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா
இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா
1. வாலிபமும் இளவயதும் மாயையே
மாயை மாயை எல்லாம் மாயையே
உன் கண்ணின் காட்சிகளால்
உன் நெஞ்சின் வழிகளால்
உன் வாழ்வே வீணானதா?
உன் மகிழ்வே பறிபோனதா? – இயேசு
2. உன் இளமையிலே நீ சந்தோஷமாயிருக்க
உன்னை படைத்தவரை நீ இன்றே நினைத்திடுவாய்
உன் வாலிபம் மறையுமுன்னே
நீ முதிர்வயதாகுமுன்னே
இயேசுவை நம்புவாயா
உன் இதயத்தை கொடுப்பாயா – இயேசு
3. உன் காலங்கள் சர்வ வல்லவர் கரத்தினில்
உன்னை வரைந்துள்ளார் அவர் உள்ளங்கையினிலே
உன் ஏக்கம் நிறைவேறும்
நீ செய்வதும் வாய்த்திடும்
உன்னத பெலத்தோடு போ
உனக்கினி வெற்றி வெற்றியே – இயேசு