🎵 Lyrics
இயேசு ராஜா முன்னே சென்று
வெற்றி தருவார்
அவர் பின்னே நாமும் சென்று
வெற்றி பெறுவோம்
1. தடைகளைத் தகர்த்திடுவார்
தாகத்தை தணித்திடுவார்
வாஞ்சையை நிறைவேற்றுவார்
வாழ்க்கையை வளமாக்குவார்
2. முன்னும் பின்னும் நடந்திடுவார்
முகத்தை மலரச் செய்வார்
மூத்தவர் முன் செல்கிறார்
மூழ்காமல் காத்திடுவார்
3. நமக்கு முன் நடந்திடுவார்
கோணலைச் செவ்வையாக்குவார்
பெயர் சொல்லி அழைத்திடுவார்
பெரியோனாய் மாற்றிடுவார்