Yesuvai Naangal

Vazhvin Geethangal #19

Sung By

Bro. Daniel Vincent

Share

🎵 Lyrics

இயேசுவை நாங்கள் துதிக்கிறோம்
இயேசுவை நாங்கள் புகழ்கிறோம்

இயேசுவை நாங்கள் போற்றுகிறோம்

இயேசுவை நாங்கள் தொழுகிறோம்
இயேசுவே ஆண்டவர் – 2 – இயேசுவே இரட்சகர்

1. மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த
இயேசுவே ஆண்டவர்
பாதாளம்வென்று ஜெயித்தெழுந்த
இயேசுவே ஆண்டவர் – இயேசுவே

2. கல்லறை காவலர் உந்தன் உயிர்ப்பை
தடுத்திட முடியவில்லை
மரித்து எழுந்த கிறிஸ்து நீர்
என்றுமே மரிப்பதில்லை – இயேசுவே

3. உம்மை எதிர்த்து ஒருவருமே
நிற்பதே இல்லையே
உமது வார்த்தையை எதிர்ப்பாரும்
எவருமேயில்லையே – இயேசுவே

4. வானிலும் பூவிலும் உம்மைத் தவிர
வேறொரு நாமம் இல்லை
போற்றி பணிந்து தொழுதிட
வேறொரு நாமம் இல்லை – இயேசுவே

5. இதயத்தில் நம்பியே நான்
நீதிமானாய் மாறுவேன்
நாவினால் அறிக்கை செய்து
இரட்சிப்பை பெற்றிடுவேன் – இயேசுவே