Yesuve Yen Vaazhvile

Vazhvin Geethangal #18

Sung By

Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

இயேசுவே என் வாழ்விலே
நீர் வருவது எனக்கு சந்தோஷமே
வாரும் வாரும் காற்றாய் வாரும்
எத்திசையிலிருந்தும் என்மேல் வீசும்

1. உலர்ந்த எலும்புகள் உயிர்பெற செய்யணுமே
நரம்புகள் சதைகளும் உண்டாக வேண்டுமே
தோலினால் மூடணுமே ஆவியை அனுப்பணுமே
ஒரு சேனையாய் பலத்த சேனையாய் நான்
காலூன்றி நிற்கணுமே – வாரும் வாரும்

2. பாவங்கள் மறைந்திடணும்
சாபங்கள் நீங்கிடணும்
சகல கட்டுகளும் இப்போதே உடைந்திடணும்
நீர் வீட்டுக்கு வர வேணுமே
மாற்றம் தர வேணுமே
இழந்ததை தேடி மீட்கவே நீர் வந்தீரே இயேசையா – வாரும் வாரும்

3. வியாதிகள் மறைந்திடணும்
வேதனை நீங்கிடணும்
கவலை கண்ணீரெல்லாம்
இன்றே முடிந்திடணும்
இயேசுவே வந்திடுமே
தாமதம் வேண்டாமே
இயேசுவே என் வாழ்விலே நீர்
வந்தாலே அற்புதமே – வாரும் வாரும்