🎵 Lyrics
உம் ஆவியை ஊற்றுங்கப்பா
உம் ஆசீரை ஊற்றுங்கப்பா
முன்மாரி மழையை ஊற்றினீரே
பின்மாரி மழையை ஊற்றுங்கப்பா
அனுபல்லவி
ஊற்றுங்கப்பா உம் ஆவியை
ஊற்றுங்கப்பா அபிஷேகத்தை
1. மாம்சமான யாவர் மேலும்
ஊற்றுவேன் என்றீரே
வாலிபர் மீது, கன்னியர் மீது
பெரியோரின் மேலும் ஊற்றுங்கப்பா
(சிறியோரின் மேலும் ஊற்றுங்கப்பா)
– ஊற்றுங்கப்பா
2. தாகமுள்ள மாந்தர் மீது
ஊற்றுவேன் என்றீரே
வறண்ட நிலம் போல் தாகமே இல்லாத
மாந்தரின் மேலும் ஊற்றுங்கப்பா
எங்களின் மேலும் ஊற்றுங்கப்பா – ஊற்றுங்கப்பா
3. கிருபையின் ஆவி மன்றாட்டின் ஆவி
ஊற்றுவேன் என்றீரே
குடும்பத்தின் மீது சபையின் மீது
ஊழியர் மேலும் ஊற்றுங்கப்பா
தேசத்தின் மேலும் ஊற்றுங்கப்பா – ஊற்றுங்கப்பா