Unmai Anbu

Vazhvin Geethangal #10

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

உண்மை அன்பு உறங்குவதில்லை – உன்
உண்மை அன்பு மறைவதேயில்லை
உன் அன்பொருநாள் வெளிப்படுமே கலங்காதே
உன் அன்பொருநாள் விளங்கிடுமே திகையாதே

1. உதவி செய்து உதை வாங்கித் தவிக்கின்றாயோ
உன் உள்ளமெல்லாம் காயங்களால் நிறைந்துள்ளதோ
நன்மை செய்தும் அது உனக்குப் பயனில்லையோ
நாளெல்லாம் இதை நினைத்துக் கலங்குகின்றாயோ
– உண்மை

2. எனக்கென்ன செய்தாய் என்று கேட்கும் மக்கள் கூட்டமே
உன்னை என்ன செய்வேன் பார் என்று சொல்லும் கூட்டமே
என்ன செய்யப் போகிறேன் என்னும் நெஞ்சமே
கலங்காதே நான் என்றும் உந்தன் பக்கமே – 2
– உண்மை

3. என் மகளே(னே) என்னை நீ எண்ணிப் பாரேன்
நான் கடந்து வந்த பாதைகள் தான் உனக்கும் தானே
மாயைகளை மனதில் நினைத்து சோர்ந்து போகாதே
நான் உனக்குப் போதும் என்றும் உந்தன் வாழ்விலே-2
-உண்மை