🎵 Lyrics
கல்வாரியில் தொங்குகிறார்
கர்த்தர் இயேசு தொங்குகிறார்
கல்மனம் இன்னும் கரையலையோ
கண்களில் கண்ணீர் வரவில்லையோ ஆ…ஆ…ஆ…ஆ
1. கைகள் கால்களில் ஆணியுடன்
கைவிடா நேசர் தொங்குகிறார்
கவலை கஷ்டங்கள் நீக்கிடவே
கண்ணீரை களிப்பாக மாற்றிடவே
2. தலையில் முள்முடி சூட்டப்பட்டு
தந்தையைப் பிரிந்து தொங்குகிறார்
தம் பிள்ளையாய் உன்னை ஏற்றுக்கொண்டு
உன்னோடு உறவாடி மகிழ்ந்திடவே
3. ஈட்டியால் இதயம் கிழிக்கப்பட்டு
ஈன சிலுவையில் தொங்குகிறார்
இதயம் நொறுங்கி இன்றே நீ வா
இயேசுவை தெய்வமாய் ஏற்றுக்கொள் வா