🎵 Lyrics
கர்த்தாவே உம் கிருபை
எவ்வளவெனக்கு அருமை
நான் உமது செட்டைகளின்
நிழலில் வந்து அடைவேன்
1. பறந்து காக்கும் பட்சி நீர்
பாதுகாப்பாய் நான் இருப்பேன்
தீவிரமாய் இன்று இறங்கிடுவீர்
கடந்து வந்து விடுவிப்பீர்
2. செங்கடல் தடைசெய்ய முடியாது
எரிக்கோ எதிர்நிற்க முடியாது
யோர்தான் வழிகளை திறந்திடுமே
கன்மலை உச்சியில் வந்திடுவேன்
3. நான் உம் ஆசி பெற்றவனே (ளே)
என்னை சபிக்க யாராலும் முடியாது
காயங்கள் அடிகள் பிலேயாமுக்கே
காக்கும் செட்டையில் நான் இருப்பேன்
4. வளர்ந்து பெருகி படர்ந்திடுவேன்
பரவி பாய்ந்து ஓடிடுவேன்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
கிருபை என்னை தினம் உஸ்ர்த்து