Neenga Enakku

Vazhvin Geethangal #15

Sung By

Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

நீங்க எனக்கு இருக்கும் போது
கலங்கலப்பா – நான் -2
கரம்பிடித்து நடத்தும் போது
பயமில்லப்பா – எனக்கு – 2
ஏற்ற நேரத்தில் எல்லாம் செய்வீரே
உம் பலத்த கரத்திலே அடங்கி இருப்பேனே

1. காகங்கள் ஒரு நாளும் கவலைப்படுவதில்லை
களஞ்சியத்தில் நாளும் சேர்த்து வைப்பதில்லை
உம்மை நோக்கி கூவும் அதற்கு உணவு தருகிறீர்
என்னை நீர் மறந்து விடுவீரோ – 2
இயேசையா -4

2. தடைகளெல்லாம் தகர்த்து வழிகளைத் திறந்து
கோணலை நேராக்கி முன்னே நடக்கிறீர்
வாசலில் நுழைந்து நன்மைபெற்றிடுவேன் நான்
வெற்றி சிறந்த தேவன் நீரே – 2
இயேசையா -4

3. துன்பங்கள் என்ன செய்யும்,தொல்லைகள்
மறைந்தோடும்
மலைபோல் வருவதெல்லாம் பனிபோல் நீங்கிடும்
நீதியின் சூரியனே உம்மை நோக்கிப்பார்ப்பேன்
வெட்கமடைந்து போவதில்லையே – 2
இயேசையா -4