🎵 Lyrics
உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என் மகனே(ளே)
1. உனக்கு எதிராய் எழும்புவோர்கள்
உனது பக்கமாய் வருவார்கள் -2
கர்த்தர் உன் அருகே இருக்கும் போது
உனக்கு எதிராய் நிற்பவன் யார் -2
2. சத்துரு வெள்ளம் போல் வந்தாலும்
கர்த்தரின் ஜெயக்கொடி உனக்குண்டு -2
எதிர்க்கும் செங்கடலும் வழி திறக்கும்
எதிரி அதிலே அழிந்திடுவான் -2
3. தீமை உன்னை அணுகிடாது
துன்பம் உறைவிடம் நெருங்காது -2
கர்த்தரின் கண்மணியே கலங்கிடாதே
கர்த்தரின் கரத்தில் நீ பயப்படாதே! -2