🎵 Lyrics
நான் உன்னோடு இருப்பேன் – 2
மகனே மகளே நான் உன்னோடு இருக்கின்றேன்
உன்னைக் காத்திட நான் உன்னோடு இருக்கின்றேன்
1. கடலின் நடுவிலே கால்நனையாமல் நடந்திட
தண்ணீர்கள் நடுவிலே மூழ்காமல் கடந்திட
நான் உன்னோடு இருப்பேன் (3)
உன்னை தோளில் சுமந்து செல்வேன்
2. எரியும் சூளையில் தீங்கொன்றும் நேராமல்
ஏழுமடங்கு தீயினில் எரியாமல் காத்திட
நான் உன்னோடு நடப்பேன் – 3
உன்னை சேதப்படுத்துவதில்லை – அவை
3. மலைகள் விலகினாலும் என் கிருபை விலகாது
மா பர்வதம் பெயர்ந்திட்டாலும் என் சமாதானம்
நீங்காது
நான் உன்னோடு இருப்பேன் – 3
உன்னை முடிவு வரையும் காப்பேன்