
🎵 Lyrics
உங்களைத் தவிர எனக்கு வேறயாருமேயில்லை
தகப்பனே சார்ந்து கொள்ள புகலிடம் இல்லை
1. நெருக்கத்திலே உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நெருங்கி வந்து உதவி செய்ய அழைத்திடுவேன்
இயேசுவே வாருமே
இன்னல்களை மாற்றிடுமே
2. எவ்வளவாய் ஒடுக்கினாலும் பெருகிடுவேன்
என்னை அழித்திடவே நசுக்கினாலும் வாழ்ந்திடுவேன்
தகப்பனே அழைத்தவரே
அருமையாக நடத்துவீரே
3. நான் எப்பொழுதும் வந்தடையும் கன்மலையே
என்னை தோளில் தூக்கி சுமந்துசெல்லும் தந்தையே
என் கோட்டையே என் அரணே
நம்பியிருக்கும் புகலிடமே (மறைவிடமே)