En Pulambalai

Vazhvin Geethangal #18

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

என் புலம்பலை ஆனந்தக் களிப்பாய்
மாறப் பண்ணிணீர் ஸ்தோத்திரம்
என் மகிமை அமர்ந்திராமல்
என் தேவனைக் கெம்பீரமாய் பாடிடும்
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா – 2

1. நெஞ்சே நீ ஆண்டவரை போற்றிடு – போற்றிடு
முழு உள்ளமே அவரை புகழ்ந்திடு – புகழ்ந்திடு
அவர் செய்த நன்மைகளை மறவாதே
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி ஸ்தோத்தரி
அல்லேலூயா

2. உன் வாயை நன்மையினால் நிரப்பினார்
– நிரப்பினார்
உன் வயது கழுகைப்போல திரும்பிடும் –
திரும்பிடும்
அக்கிரமம் யாவையும் மன்னித்தார்
உயிரை அழிவுக்கு நீக்கினார் – நீக்கினார்
அல்லேலூயா

3. அவர் உன் ஆக்கினையை அகற்றினார்
– அகற்றினார்
அவர் உன் சத்துருவை விலக்கினார் – விலக்கினார்
ராஜா உன் நடுவில் இருக்கிறார்
தீங்கை இனி நீ காண்பதில்லை – காண்பதில்லை
அல்லேலூயா