🎵 Lyrics
கருணையின் கர்த்தர் உன் நடுவில்
கலங்கிடாதே நீ கலங்கிடாதே
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
சோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே
1. துணை நின்று உனக்காய் யுத்தங்கள் செய்வார்
யுத்தத்தில் வல்லவர் இயேசு தானே
சோர்ந்திடாமல் நீ ஸ்தோத்தரித்தால்
சோதனைகளை நீ ஜெயித்திடுவாய்
2. சத்துருக்களை அவர் துரத்திவிட்டார்
சாபங்களை அவர் முறித்துவிட்டார்
கர்த்தருக்குள்ளே நீ களிகூர்ந்தால்
காரியமெல்லாம் வாய்த்திடுமே – உன்
3. நடந்தவைகளை நீ நினைக்கவும் வேண்டாம்
எதிர்காலம் குறித்து திகைக்கவும் வேண்டாம்
நன்றியுடன் நீ பின்பற்றினால்
நன்மையின் வாழ்வை பெற்றிடுவாய்