
🎵 Lyrics
ஜோதிகளின் பிதாவே
ஸ்தோத்திரம் ஜயா
ஆதி பிதா தெய்வமே
ஸ்தோத்திரம் ஐயா
உம்மை துதிக்கிறேன் உம்மை புகழ்கிறேன்
உம்மில் மகிழ்கிறேன் உம்மை உயர்த்துவேன்
1. வெறுமையும் ஒழுங்கின்மையும் மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசைவாடுகிறவரே
ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய் அழைக்கிறவரே -2
(உம்மை)
2. கொடி என்னை செடியோடு இணைத்துக் கொள்பவரே
அதிக கனிதரும்படி சுத்தம் செய்பவரே
உலகத்தை பலனாலே நிரப்ப செய்பவரே
ஏற்றகாலம் தீவிரமாய் செய்து முடிப்பவரே -2
(உம்மை)
3. எந்தன் பலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்குபோதும் என்று சொன்னவரே
ஏற்றபடி வேண்டிக்கொள்ள உதவி செய்பவரே
எனக்காய் பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே – 2
(உம்மை)