🎵 Lyrics
வாக்குத்தத்தம் நிறைவேறும் காலம்
வந்துவிட்டது விரைவில் வந்துவிட்டது
துக்கத்தின் நாட்கள் முடிந்துவிட்டது
இன்றோடு முடிந்துவிட்டது
வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் நன்மை செய்பவர்
1. சின்னவன் ஆயிரமாவான்
சிறியவன் பலத்த ஜாதியுமாவான்
உன்னோடு இருந்து நான்செய்யும்
காரியங்கள் பெரிதாயிருக்கும்
2. உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை
ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை
ஒருநாளும் மேற்கொள்வதில்லை
3. நிச்சயமாகவே முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நீங்கள் எதிர்பார்க்கும் நல்முடிவை
உங்களுக்கு கொடுத்திடுவேன்
4. என் ஜனங்கள் நான் அளிக்கும்
நன்மையால் திருப்தியாவார்கள்
என் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதேயில்லை