🎵 Lyrics
எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்
இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
என்ன நேர்ந்தாலும் நன்றி என்று சொல்லுங்கள்
இதுவே உங்களைக் குறித்து அவரின் சித்தமே தேவ சித்தமே
1. கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன்
எதை நினைத்தும் கலங்காமல் தேவனிடம் சொல்லுங்கள்
அப்பொழுதுங்களை தேவ சமாதானம் ஆண்டு கொள்ளுமே இதயம் நிரப்புமே
2.நம்பிக்கையில் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
துன்ப வேளையில் பொறுமையாயிருங்கள்
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்
ஆவியில் அனலாக ஊழியம் செய்திடுங்கள் ஜெபத்தில் நில்லுங்கள்
3. கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பது உங்கள் பெலனே
எது இல்லாமல் போனாலும் கர்த்தர் உங்கள் பெலனே
பலத்தால் இடைகட்டி வழியை செவ்வைப்படுத்தும் தேவனே
மான்கால்கள் போலாக்கி உயர் ஸ்தலத்தில் நிறுத்துவார் கவலை வேண்டாமே