
Yeppoluthu Vidiyim Yendru
Vazhvin Geethangal #22
Sung By
Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj
Share
🎵 Lyrics
எப்பொழுது விடியும் என்று
ஏங்கிடும் ஜாமக்காரன் போல்
என் ஆத்துமா உமக்காக
காத்திருக்குது – மீட்பரே
உமக்காக காத்திருக்குது
1. ஆழங்களிலிருந்து உம்மைக் கூப்பிடுகிறேன்
ஆண்டவர் என் சத்தத்தைக் கேளுமையா
உமது வார்த்தையை நம்பி இருக்கிறேன்
உதவி செய்யும் வரை உம்மையே நோக்குகிறேன்
2. கொந்தளிக்கும் ஜலம் என்மேல் புரண்டு போனாலும்
மனுஷரின் கோபம் என்மேல் எரிந்து வந்தாலும்
வேடனின் கண்ணிகளுக்கு தப்புவிக்கும் தெய்வமே
உமது மறைவினிலே தஞ்சம் அடைகிறேன்
3. தெற்கத்தி வெள்ளங்களை நீர் திருப்புவது போல்
எந்தனின் சிறையிருப்பை திருப்புமே ஐயா
பூர்வ நாட்களைப் போல் புதிதாய் மாற்றிடுமே
கண்ணீரோடு ஜெபிக்கிறேன் கெம்பீரமாய் அறுத்திடுவேன்