🎵 Lyrics
கெம்பீரமாய் தேவனை பாடிடுவேன்
ஆர்ப்பரித்து பாடி முழங்கிடுவேன்.
அல்லேலூயா ஓசன்னா – 4
1. எருசலேமே நீ பயப்படாதே
சீயோனே நீ தளராதே
உன் தேவன் உன்னைப் பார்த்து
மகிழ்ந்து துள்ளுகிறார். (அல்லேலுôயா)
2. ஆக்கினையை அவர் அகற்றி விட்டார்
சத்துருவை துரத்தி விட்டார்
ஆண்டவர் உன் நடுவில் உள்ளார்
இனித் தீங்கை காணமாட்டாய் (அல்லேலுôயா)
3. பூமியிலே எல்லா ஜனங்களிலும்
உன்னை உயர்த்தி வைத்திடுவார்
பெயரும் புகழுமாய் வைத்திடுவார்
நன்றி கீதம் பாடிடுவாய் (அல்லேலுôயா)
4. நம் இயேசு அவர் நல்லவரே
அவர் நம்மை இரட்சிப்பாரே
உன் பேரில் அவர் அகமகிழ்ந்து
கெம்பீரமாய் களிகூறுவார். (அல்லேலுôயா)