🎵 Lyrics
நன்றி சொல்கிறேன் இயேசுவே-2
நீங்க செய்த நன்மைக்கு
நான் பெற்ற உதவிக்கு
நன்றி சொல்கிறேன் இயேசுவே
1. நெருக்கத்தில் இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே
நெருக்கத்தில் அழைத்தபோது ஓடோடி வந்தீரே
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் -(2)
2. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரமாய் என் பாவம் விலக்கினீர்
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் -(2)
3. கண்களை கண்ணீருக்கு தப்புவித்து மீட்டீரே
கால்களை இடறலுக்கு நீங்கலாக்கி மீட்டீரே
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் -(2)
4. எத்தனை நன்மை செய்தீர்
என்ன நான் செலுத்திடுவேன்
நன்மைகளை எண்ணியெண்ணி
நாள் முழுதும் தொழுதிடுவேன்
கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
காலில் விழுந்து நன்றி சொல்கிறேன் -(2)