🎵 Lyrics
நீ கட்டப்படு என்றும்,அஸ்திபாரப்படு என்றும்
சொல்லுகிறவர் நானே
நீ குடியேறுவாய் வேறூன்றுவாய்
பூத்து கனிகள் தருவாய்
1. யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே
நானே உந்தன் தேவன்
உன்னை கைவிடமாட்டேன்
வலக்கரம் பிடித்திடுவேன்
துணையாய் நின்றிடுவேன்
என்னில் மகிழுவாய் கெம்பீரிப்பாய்
மேன்மைபாராட்டுவாய்
2. இஸ்ரவேலென்னும் கன்னிகையே
உன்னை மறுபடி கட்டுவேன்
ஆடிப்பாடி களிப்போடு நீ புறப்படுவாய்
நீ குறுகிப்போவதில்லை
சிறுமைப் படுவதில்லை
உன்னை கட்டுவேன் நாட்டுவேன்
மகிமைப்படுத்திடுவேன்
3. இஸ்ரவேலென்னும் மலைகளே
என் வார்த்தையை கேளுங்கள்
நானே உங்கள் பட்சத்திலிருந்து கண்ணோக்கிடுவேன்
புது உள்ளம் தந்திடுவேன்
புது ஆவி ஊற்றிடுவேன்
நீ பலுகுவாய் பெருகுவாய்
விருத்தியடைந்திடுவாய்