🎵 Lyrics
சொன்னவர் கர்த்தர் வாக்கு மாறிட,
மனம் மாறிட மனிதன் அல்ல
அவர் பொய் சொல்ல மாட்டார்
சொன்னதை நிறைவேற்றுவார்
1. கலங்கிடாதே திகைத்திடாதே
நானே உன் தேவன்
பலப்படுத்தி சகாயம் செய்வேன்
நீதியின் கரத்தால் தாங்கிடுவேன்
2. இஸ்ரவேலே நீ என் தாசன்
உன்னை மறப்பதில்லை
உன்னை நானே மீட்டுக்கொண்டேன்
உன்னில் நானே மகிமைப்படுவேன்
3. இனி நீ அழுது கொண்டிருப்பதில்லை
உனது குரல் கேட்பேன்
இமைப்பொழுது கைவிட்டாலும்
உருக்கமாய் நான் இரங்கிடுவேன்
4. பயப்படாதே! சிறுமந்தையே
ராஜ்யம் தந்திடுவேன்
போரடிக்கும் புது யந்திரமாக
கூர்மையாக்கி பயன்படுத்துவேன்