🎵 Lyrics
எல்லாம் நீரே இயேசுவே
எனக்கெல்லாம் நீரே இயேசுவே
நீரின்றியே நான் வாழ முடியுமோ
உம் துணையின்றியே அணுவேதும் அசையுமோ
எனக்கெல்லாமே நீர்தானே
எந்நாளும் நீர்தானே
1. உண்ணும் உணவால் அல்ல
அருந்தும் நீரால் அல்ல
உம் வார்த்தையால் உயிர்
வாழ்கிறேன் இயேசுவே
2. சிறந்த மருந்தால் அல்ல
நல்ல சிகிச்சையால் அல்ல
உம் தழும்புகளால்
சுகமாகிறேன் இயேசுவே
3. என் பலத்தால் அல்ல
என் சக்தியால் அல்ல
உம் ஆவியால்
பெலனடைகிறேன் இயேசுவே
4. என் பணத்தால் அல்ல
என் பதவியால் அல்ல
உம் கிருபையால்
நிலை நிற்கிறேன் இயேசுவே