Neer Ennaku Maraividam

Vazhvin Geethangal #27

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

நீர் எனக்கு மறைவிடமாய் இருக்கிறீர்
இக்கட்டுக்கு விலக்கி என்னை காக்கிறீர்
இரட்சண்யப் பாடல்கள்
என்னை சூழசெய்கிறீர்

1. உன்னதமானவரே உம் மறைவிலிருக்கிறேன்
சர்வ வல்லவரே உம் நிழலில் தங்கிடுவேன்
நீர் எந்தன் அடைக்கலம் என்கோட்டை என் தேவன்
நான் நம்பியிருப்பவர் என்றே நான் சொல்லிடுவேன்

2. தமது சிறகாலே என்னை மூடுவார்
அவரது செட்டையில் நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
அவரது சத்தியம் எனது கேடகம்
பொல்லாப்பு நேராது வாதையும் அணுகாது

3. இரவின் பயங்களோ பகலின் அம்புகளோ
வேடனின் கண்ணிகளோ அணுகவே அணுகாது
பாழாக்கும் கொள்ளைநோய் பயமுறுத்தும் சங்காரம்
பயப்பட மாட்டேன் என் தேவன் தப்புவிப்பீர்

4. என்னை தாழ்த்துகிறேன் உம்மை உயர்த்துகிறேன்
நீரே பெரியவர் கனமகிமைக்கு பாத்திரர்
உம்மை நோக்கி கூப்பிடுவேன் பதில் எனக்கு தந்திடுவீர்
ஆபத்தில் என்னோடிருந்து கனப்படுத்தி இரட்சிப்பீர்